தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம் நேற்று (26/09) தமிழர் தாயகப்பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவினார்.

Thileepan Jaffna

ஐந்து அம்ச கோரிக்கைகள்

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியா, தமிழரின் அகிம்சை போராட்டத்தை மதிக்காமல், கபட நோக்கில் செயற்பட்டு ஒரு உன்னத போராளியின் உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

Latest articles

Similar articles