“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என முழக்கமிட்ட சோபியாவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணம் செய்யும்போது, விமானத்தில் இருந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என குரல் எழுப்பினார்.

இதன் பின்னர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சோபியா, நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் காவலில் வைக்க கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் இன்று (04/09) சோபியா மீதான பிணை வழங்கும் வழக்கில், நீதிபதி சோபியாவிற்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

Tamilisai Soundararajan BJP Sofia Tamil Nadu

இதற்கிடையே, பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சோபியா கனடாவில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles