அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் – முதல்வர் எடப்பாடி

ரஜினியை விமர்சிக்க வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கியவுடன் அவர் மீதான விமர்சனங்களை தமிழக அரசியல்வாதிகள் ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக திமுக மறைமுகமாகவும், அதிமுக போன்ற கட்சிகள் நேரடியாகவும் ரஜினியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் என்றும், சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தை விமர்சனம் செய்து பெரிய ஆளாக்கி அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக ஆக்கிவிட வேண்டாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles