ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதி விசேட வர்த்தமானி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
தனக்குரிய நிறைவேற்று அதிகாரம் மற்றும் விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த அதி விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை சார்ந்த அல்லது அவர்களினால் அதிகாரமளிக்கப்பட்டவர்களினால் வழங்கப்படும் எழுத்து மூலமான அனுமதியின்றி எவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
ஏற்கனவே கொரோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வரும்போது, அரசாங்கத்தின் சொந்த நலன்களுக்காக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, நாட்டு மக்களை மேலும் வருத்திக்கொண்டிருக்கின்றது இலங்கை அரசாங்கம்.
முழுமையான வர்த்தமானியை தமிழில் பார்வையிட இங்கே அழுத்தவும்.
