நாங்கள் அதிகாரத்திற்கு வந்தது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கே – பிரதமர்

நாங்கள் அதிகாரத்திற்கு வந்தது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கே, கட்சி பேதமின்றி ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18/01) வௌியிட்டுள்ள விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி ஜனாதிபதி ஆணைக்கழுவை நியமித்ததுடன், அந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். எமது அமைச்சர்களும் நானும் ஆணைக்குழுவிற்கு சென்று சாட்சியமளித்தோம்.

கடந்த அரசாங்கத்தில் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனினும் அவை தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் விசாரணை செய்யப்படவில்லை. பாராளுமன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று பிரதமரின் விஷேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles