இலங்கையில் சமூக வலைத்தளங்களினூடான துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு

சமூக வலைத்தளங்களினூடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது இலங்கையில் அதிகரித்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களினூடாக மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பான 12,000 இற்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த பத்து மாதங்களில் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பெண்கள், சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான துஷ்பிரயோகங்களைத் தடுக்க, பெற்றோர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரியர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles