இலகுவாக வென்றது இந்திய அணி

தென் ஆபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆபிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் 32.2 ஓவரில் 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இந்திய அணியின் பந்து வீச்சில் சாஹால் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20.3 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் தவான் 51 ஓட்டங்களுடனும், கோஹ்லி 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

ஆட்ட நாயகனாக முதல் முறையாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான சாஹால் தெரிவு செய்யப்பட்டார்.

Embed from Getty Images

தென் ஆபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்றரீதியில் முன்னணி வகிக்கின்றது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles