நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்

பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேலும் நாட்டில் ஐந்து இலட்சம் விசேட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கான பொருட்களுக்கும் வரி அறவிடப்படுவதால், அவர்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆனால் இராஜாங்க நிதி அமைச்சரின் கருத்து வேறு விதமாக உள்ளது. விமலின் உரையை குறுக்கீடு செய்து பதிலளித்த இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, பாடசாலை மீதான பொருட்களுக்கு வரி அதிகரிப்படவில்லை என தெரிவித்ததுடன், டொலரின் விலை அதிகரிப்பே பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles