உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலமையிலான “ஐக்கிய மக்கள் சக்தி” அணி இன்று (02/03/20) உதயமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதப்போக்கினால் விசனமடைந்த பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதான கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் இணைந்து உருவாக்கிய “ஐக்கிய மக்கள் சக்தி” அணி வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக போட்டியிடும் பிரதான அணியாகும்.

சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் புரிந்துணர்வர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, ரஞ்சன் ராமநாயக்கா மற்றும் சரத் பொன்சேகா போன்ற முக்கிய உறுப்பினர்களும் இன்றைய நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles