ரஜினியின் அரசியல் பிரவேசம்

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது அரசியல் பிரவேசம், அதுவும் ‘ஆன்மீக அரசியல்’ பிரவேசத்தை 2017ம் ஆண்டின் இறுதி நாளன்று உறுதிப்படுத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கூடவே, வரவிருக்கும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் சாதி மத பேதமற்ற அரசியலை முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், ”பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா? நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் கெட்டு போய்விட்டது. பிற மாநிலங்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றன. இந்த நேரத்திலும் நான் மக்களுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றால், நான் சாகும்வரை குற்றவுணர்ச்சி இருக்கும். அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதி மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் என் மந்திரம். வருகிற சட்டமன்ற போரில் நம் படையும் இருக்கும். நான் ஜெயித்து நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன்” என்றார் ரஜினிகாந்த்.

முழுமையான உரை

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles