நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால், ராஜபக்சகளுக்கு தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மதவாச்சி பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே சஜித் பிரேமதாசா மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

நாம் ஆட்சியமைத்தால் அரசியல் தலையீடற்ற சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ராஜபக்ச சகோதரர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles