மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை

பூநகரி பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கடித்து குதறிய சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றுள்ளது.

நிறை வெறியில் நின்ற கடற்படையினர், ஊரடங்கு சட்டத்தை காரணம் காட்டி மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். நீரில் முகத்தை அமிழ்த்தியும், பொல்லுகளால் அடித்தும் தாக்கியது மட்டுமன்றி, கடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

மீனவர்கள் ஊரடங்கு நேரத்தில் தொழிலுக்கு செல்லும் அனுமதி பத்திரத்தைக் காட்டியபோதும், அதை சட்டை செய்யாத கடற்படையினர் தமது தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி இது தொடர்பாக எவருக்கும் தெரியப்படுத்தக் கூடாதெனவும் மிரட்டியுள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles