குற்ற செயல்களைத் தடுக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்

இலங்கையில் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் நாளைமுதல் (28/07) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

1917 மற்றும் 1997 என்பவையே அந்த புதிய தொலைபேசி இலக்கங்கள் ஆகும். இவ்விரு தொலைபேசி இலக்கங்களுக்கும் வரும் அழைப்புக்கள் காவல்துறையின் விசேட இரகசிய பிரிவினரால் கண்காணிக்கப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

பாரிய ஊழல் மோசடிகள், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள், போதைவஸ்து கடத்தல், கப்பம் கோரல் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் 1997 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தெரியப்படுத்தலாம்.

மேலும் 1917 என்ற தொலைபேசி எண்ணிற்கு, பாதாள குழுக்களின் சட்டரீதியற்ற சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களைத் தெரியப்படுத்தலாம்.

அரச இயந்திரம் செய்யும் முறைகேடுகளை அறிவிக்க எந்த தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்படவில்லை 😜

Latest articles

Similar articles