பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களுடனான சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் அவர்கள் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் திறக்கப்பட்ட பலாலி சர்வதேச விமான நிலையம், கொரோனா பரவல் ஏற்பட்ட நாள் முதல் மூடப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், இந்தியாவின் அழுத்தத்தினால் பலாலி சர்வதேச விமான நிலையம் புணரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டது.

இருப்பினும் தமிழர் தாயகத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் இயங்குவதை விரும்பாத தற்போதைய ராஜபக்ச ஆட்சியாளர்கள், கொரோனா பரவலைக் காரணம் காட்டி விமான நிலையத்தை வேண்டுமென்றே மூடி வைத்துள்ளனர்.

மேலும் காங்கேசன்துறை துறைமுகமும் திறக்கப்பட்டு, இந்தியாவுடனான வணிகரீதியிலான தொடர்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விக்னேஸ்வரன் அவர்கள் அண்ணாமலையிடம் விடுத்திருந்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles