முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கண்காணிக்கும் புலனாய்வுத்துறை

உலகின் கொடூர மனிதப் படுகொலைகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளை சிங்கள புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பினும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித தடைகளும் இல்லை என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் படைத்தரப்பினர் முள்ளிவாய்க்கால் வாகனத்தை பின் தொடர்ந்து படம் பிடிப்பதும், இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள முன்றலில் காவலரண் அமைத்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றமை போன்றவற்றால் தமிழ் மக்களை அச்சமடையச் செய்யலாம் என நினைக்கின்றனர்.

வரும் வாரங்களில் தனித்தனியாக கடிதங்களை அனுப்பி, கொழும்பிற்கு அழைத்து விசாரணை என்ற போர்வையில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

எல்லாவற்றிற்கும் முகம் கொடுக்கும் துணிவுடைய மக்களை, சிங்கள பேரினவாத அரச படையினரால் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.

18/05/2018 இல் பிரசுரமான செய்தி.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles