இதுவரையில் 10பேர் காயம். கைதுகள் ஏதும் இடம்பெறவில்லை

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை இரு ஊடகவியலாளர்கள் உட்பட 10பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடும் காயங்களிற்குள்ளான ஆறுபேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நான்குபேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை ஜனாதிபதி அவரது இல்லத்தில் இருந்திருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles