இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கொழும்பு மீரிகான பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லைத்தையே விரக்தியடைந்த மக்கள் சூழ்ந்துள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி அந்த இல்லத்தில் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மீது படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் தண்ணீர் பாய்ச்சி எதிர்க்கின்றபோதும், பொதுமக்கள் முதலாவது தடையினை அகற்றி முற்றுகையைத் தொடர்கின்றனர். அரசினால் திட்டமிட்டு மீரிகானப் பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இராணுவத்தினரின் ஒரு ஜீப் வண்டி மற்றும் பேருந்து என்பன மக்களால் தீவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள், விரக்தியின் உச்சக் கட்டத்தில் உள்ளனர். எரிபொருள், எரிவாயு, மருந்துவகைகள், உணவுப் பொருட்கள் என அனைதுப் பொருட்களிற்கும் தட்டுப்பாடு. இதனால் விரக்தியடைந்த மக்கள் வேறு வழியின்றி ஜனாதிபதியைத் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.