கோத்தாபாயவிற்கு ஆதரவாக மகாசங்கம்/கள் !!!

“டொலர் காக்கைகளும், சர்வதேச NGOக்களும் கோத்தாபாயவிற்கு தலைவலியை ஏற்படுத்தி அவரை அடிபணிய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்தால் அதற்கு எதிராக அனைத்து மகாசங்கங்களும் போராடும்” என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பீடங்களின் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இவர் கோத்தபாயவரிப்பற்றி மேலும் புகழ்கையில், “நாட்டின் தற்​போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் தமது குடும்பத்தினருடன் சுதந்திரமாக சுற்றித்திரிவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய தலைவர்தான் கோத்தா” எனவும், “புலம்பெயர்ந்தவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் உலகம் பூராகவும் வியாபித்துள்ள சமாதான தூதுவர்கள் போன்றோருக்கு மத்தியில் கோத்தா தனது பாதுகாப்பு செயலாளர் பணியை முன்னெடுத்து செல்வதில் மிகப்பெரிய சவால்களை சந்தித்திருந்தார்” எனவும் அவர் புகழ்ந்தார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles