பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார குழுவினருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்த சந்திப்பிபோது, அண்மையில் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் போன்ற அமைப்புக்களால் வறுமை மற்றும் உணவின்மை பிரச்சனைகள் காரணமாக நலிவுற்ற மற்றும் பிந்தங்கிய மக்களாக அடையாளப்படுத்தப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபை அரசியல் விவகார (UN-DPPA) உயரதிகாரி பீட்டர் டியூ, மற்றும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் உதயகுமார் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
