அரசை ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கவேண்டும் – சம்பிக்க

தற்போதைய குடும்ப ஆட்சியாளர்களால் எதையும் ஒழுங்காக செய்ய முடியாது. அவர்கள் தாமாகவும் விலக மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, ஆகவே நாம்தான் அவர்களைத் துரத்தியடிக்கவேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் எரிபொருளின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை ஐந்து மடங்காக உயர்த்துவார்கள். வாழ்க்கைச் செலவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. எனவே இந்த அரசிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு பொது வேலைத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்த வேண்டும். அதற்காக நாம் எந்த ஒரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளோம் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles