நுட்பமாக திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல்கள்

கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து கிறிஸ்தவர்களைக் கொன்றதின் பின்னணியை நோக்கும்போது, இது உலகளாவியரீதியில், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்களின் ஒரு பகுதியே என்று தோன்றுகிறது. (இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளில் நடந்தவைபோன்று) .

அதேபோல், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் மேற்கத்தைய நாட்டினரை இயன்றளவு கொலை செய்வதே பயங்கரவாதிகளின் அடுத்த நோக்கம்.

குறைந்த மனித வலுவுடன், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த மனித வெடி குண்டுத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ள. அதுமட்டுமின்றி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எந்தவையிலும் பாதிப்பு வந்துவிடக்கூடாதென்பதில் பெரும் கவனமெடுத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை ஒரு பௌத்த நாடு. பேருவளை, கண்டி போன்ற நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதை உலகமே அறியும்.

இருப்பினும் கிறிஸ்தவர்களை குறிவைத்து, அதுவும் தமிழர்கள் அதிகம் வாழும் கொட்டஹேனா, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் தாக்குதல்களை நடாத்தியத்தின் நோக்கம் என்ன ???

IS பயங்கரவாத அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இலங்கையிலும் கிறிஸ்தவர்களைக் கொல்வது என்பது பிரதான நோக்கமாகும்.
அதேநேரம் தாக்குதல்களினால் சிங்கள பௌத்தர்களுக்கு எந்த பாதிப்பவும் வரக்கூடாது என்பதில் பயங்கரவாதிகள் கவனமாக இருந்துள்ளனர் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

ஏனெனில் சிங்கள பௌத்தர்கள் கொல்லப்பட்டால் இலங்கையிலுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு என்ன நடந்திருக்குமென அவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது.

உண்மையைச் சொல்வதென்றால், இந்த தொடர் குண்டுத் தாக்குதலிலும் அப்பாவி தமிழ் மக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனம்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...