கண்டி கலவரம் சொத்து இழப்புக்கள் விபரம்

கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்களினால் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

Kandy riots damages srilanka muslims

உயிரிழப்புகள் சம்பந்தமாக எவ்வித தகவல்களும் வெளியாகாத போதிலும், முஸ்லிம் மக்களின் பல சொத்துக்கள் உடைத்தும், எரித்தும் நாசமாக்கப்பட்டுள்ளன.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இதுவரையில் (6ம் திகதிவரை) 4 பள்ளிவாசல்கள், 35 வாகனங்கள், 37 வீடுகள், 46 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன என அறியமுடிகிறது.

Kandy riots damages srilanka muslims

இராணுவவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளபோதும், கண்டி-கேகாலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் மெனிக்கிண்ண என்னும் பகுதியில் நேற்றிரவு (06/03) சிலர் கலவரங்களில் ஈடுபட முயற்சித்ததால் பதற்ற நிலமை உருவானது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles