தமிழ்நாடு-யாழ்ப்பாணம் சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

யாழ்ப்பாணம்-தமிழ்நாடு சரக்கு படகுச் சேவைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும், தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிற்குமிடையிலான சரக்கு படகுச் சேவைக்கே பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்த படகுச் சேவை மூலம் இலகுவாக அத்தியாவசிய பொருட்கள், உரம் மற்றும் எரிபொருட்களை பெறமுடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், ஏற்கனவே திட்டமிட்டபடி யாழ்ப்பாணம்-திருச்சி மற்றும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள் ஜூலை முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீச்சரம் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படும் யாழ்ப்பாணம்-திருச்சி மற்றும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள் தொடர்ச்சியாக பயணிகள் சேவையில் ஈடுபடுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles