யாழ் மாநகர சபை மேயராக திரு.இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14/02) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர், யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டார்.
ஆரம்பத்திலிருந்தே ஆர்னோல்ட்தான் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளர் என்று இருந்தபோதிலும், இடையில் ஏற்பட்ட சில வேண்டாத சலசலப்புக்களின் பின்னர் வேறு சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும், ஆர்னோல்ட் யாழ் மாநகர சபை மேயராக பதவியேற்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உத்தியோகரீதியாக அறிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் 2ம் திகதி பதவியேற்பு வைபவம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.