வெளிநாட்டுப் பணத்துடன் இந்திய வியாபாரி கைது

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்ல முற்பட்ட இந்திய வியாபாரியிடம் இருந்து சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வியாபார நோக்கில் வந்திருந்த 45 வயதுடைய இந்திய பிரஜை, மீண்டும் இந்தியா செல்லும் முகமாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 117,000 கனேடிய டொலர்கள் மற்றும் 19,000 யூரோக்கள் அடங்கிய வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்ப பணம் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி நபரிற்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles