சிங்களவர்களும் நீதி தேடி ஐ.நா செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்ய இலங்கையின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனிவா சென்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரே தற்போது ஜெனிவா பயணமாகியுள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தை அவமதித்தார் என்ற காரணத்திற்காக 48 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நீண்டகால தண்டனை வழங்கப்பட்டதிற்கு காரணம் அரசியல் பழிவாங்கல் என்பது இலங்கை மக்கள் யாவரும் அறிவார்கள்.

ஜனாதிபதிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எவ்வித பலனும் ஏற்படாத காரணத்தினால் தாம் ஐ.நாவை நாடியுள்ளதாக மனுஷ நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் மஹிந்த அரசை மற்றும் கோத்தபாயவின் செயற்பாடுகளை மிகவும் வெளிப்படையாக எவ்வித பயமுமின்றி விமர்சித்து வந்தவர் ரஞ்சன் ராமநாணயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனிவாவிலிருந்து ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவின் பதிவு சிங்கள மொழியில்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles