ஹரின் பெர்னான்டோவின் சண்டித்தனம்

ராஜபக்ச சண்டியர்களை அகற்றி நாட்டைக் காப்பாற்ற போராடுவதாகக் சொல்லும் ஐக்கிய மக்கள் சக்தியிலும் சண்டியர்கள் இருப்பதையே நேற்றைய சம்பவம் தெளிவாகக் காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ நேற்று(01/05) இடம்பெற்ற மேதின கூட்டத்தில் சக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுடன் தகராறில் ஈடுபட்டிருந்தார்.

வாய்த்தகராறில் ஈடுபட்ட ஹரின் பெர்னான்டோவை சிலர் அப்புறப்படுத்தும்போதும், அவர் பொன்சேகாவை நோக்கி ஆவேசத்துடன் நகர்ந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

சரத் பொன்சேகா என்னதான் சொல்லியிருந்தாலும் ஹரின் பெர்னான்டோ நடந்துகொண்ட விதம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்ததுள்ளது. அதுமட்டுமன்றி ஐக்கிய மக்கள் சக்தியின் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகவே அது அமைந்ததுள்ளது. இது தொடர்பாக சஜித் பிரேமதாச விசாரணையை மேற்கொள்வாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹரின் பெர்னான்டோ இதே மாதிரியான ஒரு நடத்தையை, கடந்த மாதம் 6ம் திகதி பாராளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார். சபைக்கு தலைமைதாங்கிய அங்கஜனுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் சுமந்திரன் அவர்கள் நேரடியகவே ஹரின் பெர்னான்டோவிற்கு சிறப்பான பதிலடியை வழங்கினார். அதனைக் கீழுள்ள காணொளியில் காணலாம்.

ஹரின் பெர்னான்டோ, சக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுடன் தகராறில் ஈடுபடும் காணொளி.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles