மக்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஹரின்

நேற்று (08/04) பாராளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ, ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகும்வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அரச தரப்பினரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அரசாங்கமோ, ஜனாதிபதியோ பதவி விலகப் போவதில்லை எனத் தெரிகிறது. எனவே மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், இவர்கள் பதவி விலகி போகும்வரை தொடர்ச்சியாக உங்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

ஏனெனில் இந்த பாராளுமன்றம் மக்களின் குரலை செவிமடுப்பதாகத் தெரியவில்லை. மக்களின் குரலை மதிக்காமல் தொடர்ந்தும் இவர்கள் ஆட்சி செய்தால், இந்த நாடு மேலும் அதழ பாதாளத்திற்கு இந்த நாடு செல்லும் எனவும் ஹரின் பெர்னான்டோ மேலும் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles