றம்புக்கணை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரி உட்பட நான்கு காவல்துறையினரை இலங்கை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கேகாலை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. நீதிமன்றினால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட பல காவல்துறையினர் போலியான சுகவீனங்களைக் காரணம் காட்டி தாமாக வைத்தியசாலையில் அனுமதியான சம்பவங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.