தொடரும் கடும் மழை காரணமாக வடமாகாணத்தில் இதுவரை 15,622பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் இதுவரையில் 29 வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், 7,025பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வலுவான தாழமுக்கத்தால் கடும் மழைவீழ்ச்சி ஏற்படும் என இலங்கை வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கையை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 28 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் கடும் மழை பொழியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.