எதிர்க்கட்சியில் இருந்து ராஜபக்ச அரசின் 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தாம் அரசிற்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொள்வதாக பாராளுமன்றில் தெரிவித்துள்ளனர்.
(f)பைஸல் காசிம், M.S.தெளபீக், இஷாக் ரஹ்மான் ஆகியோரே தாம் வழங்கிய அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொண்டவர்களாவர்.
இன்று இலங்கை நாடு இந்த நிலைக்கு செல்வதற்கு இவர்களும் ஒரு காரணமாக இருந்துள்ளார்கள் என்பது வேதனையான விடயமாகும்.
