ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட்டின் எட்ஜ் உலாவி (Edge browser)

Edge browser : மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எட்ஜ் உலாவியை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் அலைபேசிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Edge browser

மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உலாவி, மிகவும் விரைவாக இணையத்தளங்களை லோட் (load) செய்கிறது.

விண்டோஸ் 10 பாவனையாளர்கள் ஆண்ட்ராய்ட் அலைபேசிகளில் எட்ஜ் உலாவியை பாவிக்கும்போது, கணனியில் எட்ஜ் உலாவியில் பாவித்த தகவல்கள், கடவுச் சொற்கள் என்பன இலகுவாகவும், பாதுகாப்புடனும் அலைபேசியில் பாவிக்க கூடியதாக இருக்கும்.

மேலும், QR குறியீடுகளை (QR Code) இலகுவாக உருவாக்குதல், இணையப் பக்கங்களை இலகுவாக வாசிப்பதற்கு Reading View என பல அம்சங்களைக்கொண்டதாக எட்ஜ் உலாவி உருவாக்கப்பட்டுள்ளது.

எட்ஜ் உலாவியை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் அலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய, இங்கே அழுத்தவும் – எட்ஜ் உலாவி

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles