அறிமுக வீரரின் அசத்தலான பந்து வீச்சு, தென் ஆபிரிக்கா 135 ஓட்டங்களால் வெற்றி

தென் ஆபிரிக்கா செஞ்சுரீயன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆபிரிக்கா அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அறியமுக வீரரான (N)கிடியின் அசத்தலான பந்து வீச்சின் மூலம் பெற்ற ஆறு விக்கட்டுக்கள், தென் ஆபிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

Embed from Getty Images

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கட்டுக்களையும் இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மார்க்ரம் 94 ஓட்டங்களையும், அம்லா 82 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அஸ்வின் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்திய அணி சார்பாக கோலி 153 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், மற்றைய வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதால் 307 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையம் இழந்தது. இதில் மோர்கல் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது. இதில் A.B.De வில்லியர்ஸ் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தென் ஆபிரிக்கா அணியின் அறியமுக வீரரான (N)கிடியின் அசத்தலான பந்து வீச்சிற்கு முகம் குடுக்க முடியாமல், அனைத்து விக்கட்டுக்களையம் இழந்து 151ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் (N)கிடி 39 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக (N)கிடி தெரிவு செய்யப்பட்டார். முன்று போட்டிகள் கொண்ட தொடரை, தென் ஆபிரிக்கா அணி 2:0 என்றரீதியில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24ம் திகதி முதல் 28ம் திகதி வரை ஜோஹன்னர்ஸ்பெர்க்கில் நடைபெறவுள்ளது.

Latest articles

Similar articles