இலங்கை இராணுவத்திற்கு 300,000 தடுப்பூசிகளை வழங்கிய சீன இராணுவம்

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், இலங்கை இராணுவத்திற்கு 300,000 சினோபா(f)ம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

மேற்குறித்த தடுப்பூசிகள் வரும் சனிக்கிழமை(28/08) இலங்கை வந்தடையுமென இலங்கையின் தேசிய கொரோனா தடுப்பு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நேச நாடான சீனா இதுவரையில் பல மில்லியன் சினோபா(f)ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கி, இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் தாக்கத்தை ஓரளவேனும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி புரிந்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles