இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பாகவும், மத்திய வங்கியின் தற்போதைய நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாடு மீட்சி பெற தமது கட்சி மத்திய வங்கிக்கு எப்போதும் ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், மத்திய வங்கியின் நிலை மிக மிக மோசமாக உள்ளது. இலங்கையை பொறுப்பெடுது காப்பாற்றுவது மிகக் கடினமான ஒரு பாரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில், திறைசேரியின் செயலாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எரான் விக்கிரம்சிங்க, கபீர் ஹாசிம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.