12 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம், இரு பிக்குகள் உட்பட 8 பேர் கைது !!

நன்றி : வீரகேசரி

குருநாகல் – ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில் பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்திய பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முழுமையாகப் படிக்க (வீரகேசரி)

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles