9 வயது சிறுமி கொலை, ஜனாதிபதி இரங்கல்

காணாமல் போயிருந்த பண்டாரகம-அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் 9 வயது சிறுமி, அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவரை இனம் தெரியாதவர்கள் கொலை செய்த பின்னர், உடலை சதுப்பு நிலத்தில் வீசிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்க்ப்பட்டு வருகின்றன.

மேலும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் மேற்படி சிறுமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், விரைவில் நீதி கிடைக்க உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles