புதினம்
National news
3,812 கொரோனா தொற்றாளர்கள், 214பேர் உயிரிழப்பு
புதினம் -
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றால் புதிதாக 3,812பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுடகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டை தொடர்ந்து முடக்கி இருப்பதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், வியாழக்கிழமை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் இலங்கையில் பதிவான அதிக உயிரிழப்புகள் இதுவாகும். இதில் முப்பது வயதிற்குட்பட்ட ஐவர்...
National news
அரசு மூர்க்கத்தனமாக செயற்படுகிறது ! – இராஜ் வீரரத்ன
புதினம் -
இலங்கையின் தேசிய இளைஞர் சேவையின் தலைவர் பதிவியிலிருந்து அண்மையில் பதவி விலகிய பாடகர் இராஜ் வீரரத்ன தன்னைபற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ச தன்னை கன்னத்தில் அறைந்ததாக வெளியான செய்தி பொய்யானது என தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான பின்னர் தான் யோஷிதவுடன்...
National news
அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கொரோனா தொற்று
புதினம் -
இலங்கையின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இலங்கையில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றால் இந்த மாதம் மட்டும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அண்மையில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
National news
செப்டெம்பர் 6ம் திகதிவரை நீடிப்பு
புதினம் -
ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியுடன் முடியவிருந்த நாட்டின் முடக்கநிலை, வரும் செப்டெம்பெர் 6ம் திகதிவரை நீடிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதிக்கும், தேசிய கொரோன தடுப்பு செயலணிக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மேலதிக ஒரு வாரகால முடக்கத்திற்கு சம்மதித்துள்ளார். நாட்டை முற்றாக முடக்குவதில் பயனில்லை என்பதில்...
National news
இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
புதினம் -
இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதன்முதலாக 200 இற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 25ம் திகதிக்கான தரவின்படி, 108 பெண்கள் மற்றும் 101 ஆண்கள் உட்பட மொத்தமாக 209பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் 163பேர் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள். 46பேர் முப்பது...
World News
காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு, 60பேர் உயிரிழப்பு
புதினம் -
ஆப்கானிஸ்தான் தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 60பேர் உயிரிழந்துள்ளதுடன், 140பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்கப் படையினரும் உள்ளடங்குவர். மேலும் 15 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல் என நம்பப்படும் மேற்படி தாக்குதலில், குண்டு வெடிப்பிற்கு முன்னர் விமான நிலைய முகப்பில் மக்கள் மீது துப்பாக்கிச்...
National news
மேலும் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ரணில் வேண்டுகோள்
புதினம் -
நாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கும்படி இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். அதேபோல் மேலதிகமாக நீடிக்கப்படும் பொது முடக்கத்திற்கும் மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவார்கள் என ரணில் தெரிவித்துள்ளார். வேகமாகப் பரவிவரும் கொரோனாவினால் கடந்த 7ம் திகதியிலிருந்து இதுவரை 5,000பேர்...
Articles
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது
புதினம் -
இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் 52,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சட்டமா அதிபரின்...
National news
இலங்கை இராணுவத்திற்கு 300,000 தடுப்பூசிகளை வழங்கிய சீன இராணுவம்
புதினம் -
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், இலங்கை இராணுவத்திற்கு 300,000 சினோபா(f)ம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. மேற்குறித்த தடுப்பூசிகள் வரும் சனிக்கிழமை(28/08) இலங்கை வந்தடையுமென இலங்கையின் தேசிய கொரோனா தடுப்பு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் நேச நாடான சீனா இதுவரையில் பல மில்லியன் சினோபா(f)ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கி, இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் தாக்கத்தை...
National news
4,446 கொரோனா தொற்றாளர்கள், 190பேர் உயிரிழப்பு
புதினம் -
இலங்கையில் கொரோனாவின் பரவல் காரணமாக நாளாந்தம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இலங்கையின் சுகாதார சேவைகள் பிரதான அதிகாரியினால் நேற்று (24/08) வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 190 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் முப்பது வயதிற்குட்பட்ட இருவரும் உள்ளடங்குகின்றனர். முப்பதிற்கும், அறுபது வயதிற்கும் இடைப்பட்ட 38 பேரும், அறுபது வயதிற்கு...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
