புதினம்

இலகுவாக வென்றது இந்திய அணி

தென் ஆபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆபிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் 32.2 ஓவரில் 118 ஓட்டங்களை...

இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் சமனிலையில் முடிவு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்தது. முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் அணி பெற்ற 513 ஓட்டங்களுக்கு ( மொமினுல் ஹக் - 176) பதிலாக இலங்கை அணி 713 ஓட்டங்களைக் குவித்தது (BKG.மெண்டிஸ் - 196, DM.டி சில்வா - 173, ARS.சில்வா 109). இரண்டாவது இனிங்ஸில் விளையாடிய பங்களாதேஷ் அணி ஐந்தாவது...

உதயங்க வீரதுங்க டுபாயில் கைது

மஹிந்த ஆட்சியில் ரஸ்சியாவிற்கான இலங்கை தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, டுபாய் விமான நிலையத்தில் வைத்து சர்வதேச போலீசாரால் (INTERPOL) கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மிக் 27 ரக விமான கொள்வனவு ஊழலில் சம்பந்தப்பட்டிருந்த இவரை கைது செய்ய மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இவர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கின உறவினர் என்பதுடன், மஹிந்த...

இலங்கை ​விமான நிறுவன​ங்களில் ​​​​இடம்பெற்ற ​ஊழல் மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி 1, 2006 முதல் ஜனவரி 31, 2018 வரை ​இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும்.

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவிற்கு மாற்றம்

​அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மீண்டும் மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது – மத்திய அரசு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆங்கிலமே வழக்காடு மொழியாக இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 2006ம் ஆண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை ஏற்கமுடியாது என 2012ம் ஆண்டிலேயே மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில், இதுபற்றி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கேள்விக்கு மத்திய இணையமைச்சர்...

யாழ்ப்பாணம் வந்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (01/02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இலங்கை பொதுஜன முன்னனியின் தேர்தல் கூட்டத்திற்காக, விசேட அதிரடிப் படையின் கடும் பாதுகாப்புடன் வருகை தந்த மஹிந்த, வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். மஹிந்த ராஜபக்ஸவுடன் முன்னாள் அமைச்சர் G.L.பீரிஸூம் வருகை தந்திருந்தார்.

நேவி சம்பத்தை கைதுசெய்ய மக்கள் உதவியை நாடும் புலனாய்வுத்துறை

5 மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரிப் பின்னர் கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபராவர்.

மாதகலில் இளம்பெண் கொள்ளையர்களால் படுகொலை

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் 22 வயதுடைய பெண் ஒருவர் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர்கள் தேவாலயம் சென்றிருந்தவேளையில், வீட்டில் தனிமையில் இருந்த அன்றன் டிலக்ஸி என்ற பெண்ணே ​கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (31/01) காலை வீட்டில் யாருமில்லை என நினைத்து கொள்ளையிட வந்த திருடர்கள் வீட்டைக் கொள்ளையிட்டதுடன், டிலக்ஸியையும் கொலை செய்துள்ளனர். காலை நேரத்திலேயே திருடர்கள் தமது...

ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படவுள்ள விசேட உயர் நீதிமன்றங்கள் – பிரதமர்

​பெரும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை விசாரிக்கும் வகையில் விசேட உயர் நீதிமன்றங்கள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படத்தொடங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியின்போதே மேற்படி தகவலை வெளியிட்ட பிரதமர், இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், "நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் மந்திரிசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மந்திரிசபையால்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img