ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் ஒன்பது வருடங்களின் பின்னர் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றது.
கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சியிலிருந்த லிபரல் கூட்டணிக் கட்சியை தோற்கடித்து, அன்ரனி அல்பனீசி தலைமையிலான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி(ALP) ஆட்சியமைக்கின்றது.
இதன்படி அன்ரனி அல்பனீசி ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
