தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், சிவகரன் நீக்கம்

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலாளரான சிவகரன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினரும் அமைச்சருமான அனந்தி சசிதரன் ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென தமிழரசுக் கட்சி எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் இவர்கள் இருவரது செயற்பாடுகளும் அமைந்ததை காரணமாகக் கொண்டு இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இருப்பினும் கடந்த வருடம் வடமாகாணசபை முதல்வருக்கு ஆதரவாக அனந்தியும், சிவகரனும் இருந்தமையே இவர்கள் நீக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர். முதல்வருக்கு ஆதரவாக இவர்கள் செயற்பட்டதாலேயே இவர்கள் நீக்கப்பட்டார்கள் என அறிவித்தால், தமிழரசுக் கட்சியின் பெயர் மக்களிடத்தில் இன்னும் கெட்டுவிடும் என்பதாலேயே, அக்கட்சி ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி இவ்விருவரையும் நீக்கியுள்ளது.

கடந்த வடமாகாண சபை தேர்தலில் அனந்தி சசிதரன் 87,870 வாக்குகள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Latest articles

Similar articles