இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடன் கலந்தாலோசித்த பின்னர், பின்வரும் அமைச்சுக்களை தனது பொறுப்பில் இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துள்ளார் என அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
- நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு
- தொழில்நுட்ப அமைச்சு
- மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
- முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
