கடந்த 50 மாதங்களாக குடிவரவு தடுப்பு முகாமில் இருந்த நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகள் மீண்டும் அவர்கள் முன்னர் வசித்த குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிலேவிலாவிற்கு (Biloela) செல்வதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இடைக்கால வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிம் ஷாமல்ர்ஸ் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்படி குடும்பத்திற்கு இணைப்பு விசாவை வழங்கியுள்ளார். இதனடிப்படையில், பிரியா-நடேஷ் குடும்பத்தின் நிரந்தர குடியுரிமை சம்பந்தமாக இறுதி முடிவு வரும்வரை, அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்க முடியும்.
ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி தாம் ஆட்சிக்கு வந்தால், பிரியா-நடேஸ் குடும்பம் மீள ஆஸ்திரேலியாவில் வசிக்க, சட்டத்திற்குட்பட்டு அனைத்தையும் செய்வோம் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், ஆட்சிப்பீடம் ஏறி ஐந்து நாட்களுக்குள் தமது வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளது ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி