ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஷாலின் இந்த முடிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் அணிக்கும், OPS-EPS அணியினரிடையே ஏற்கனவே கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க,  அ.தி.மு.கவை வெற்றிபெற வேண்டும் என கடுமையாக போராடி வருகிறது. இதேவேளை பா.ஜ.கவும் தனது ஆர்.கே நகர் வேட்பாளரை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகர் ​இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுகிறார் என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏட்படுத்தியுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, நடிகர் கமல்ஹாசனின் ஆதரவு விஷாலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles