கோத்தாவின் நெருங்கிய சகா நாட்டைவிட்டு தப்பி ஓட்டம் 🎥

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவும், அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிசங்க சேனாதிபதி குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

இன்று (05/04) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக டுபாய் சென்றுள்ளதாக பாராளுமன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பல பில்லியன் ரூபாய்களைக் (11.4) கொள்ளையிட்ட நிசங்க சேனாதிபதியை கைது செய்ய சர்வதேச காவல்துறையின் (இன்ரபோல்) உதவியை நாடும்படியும் அவர் பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் அனுமதியின்றி மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை இலங்கை கடற்பரப்பில் அவண்ட் கார்ட் நிறுவனம் 2012 முதல் 2015வரை நடத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதியாக பதவியேற்று ஒரு வருடத்தில் மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles