கோத்தபாயவை டிசம்பர் 6 வரை கைது செய்ய முடியாது

ஹம்பாந்தோட்டை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

இத் தடை உத்தரவு வரும் டிசம்பர் ஆறாம் திகதிவரை அமுலில் இருக்கும் என மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோத்தபாயாவினால் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட மனுவில், தான் கைது செய்யப்பட்டால், பிணை வழங்காமல் தடுத்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles