பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, இலங்கை அரசியல் அமைப்பில் 21வது திருத்தச் சட்டத்திற்கான முன்மொழிவை நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நிறைவேற்று அதிகாரத்தினை அமைச்சரவைக்கு வழங்கி, அந்த அமைச்சரவை புதிய ஜனாதிபதியினை நாடாளுமன்றம் ஊடாக தெரிவு செய்யும் வகையில் 21வது திருத்தச் சட்டம் இருக்குமென விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தானாக பதவி விலக, புதிய திருத்தச் சட்டம் மூலம் இலங்கை அமைச்சரவை பசில் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் திட்டம் ஒன்று திரைமறைவில் இடம்பெறுவதாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட விமல் வீரவன்ச சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஜனாதிபதி தரப்பு அந்தக் கருத்தை மறுத்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.