ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும்

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள்  மீதான கண்காணிப்புகள் மற்றும் அடக்குமுறைகள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் விக்டோரியா நூலண்ட் நேற்று (23/03) தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் செயற்பாட்டின் மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழு, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களையும் சந்தித்தனர்.

மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவேண்டும் என்பதை தாம் ஊக்குவிப்பதாக தெரிவித்த விக்டோரியா நூலண்ட், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வரும் வெள்ளிக்கிழமை (25/03) தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles