சம்பந்தனுக்கு அத்துரலிய தேரர் கடிதம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தனிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் உரியதன்று. எல்லா இலங்கையர்களினதும் கரிசனைகளை கவனத்தில் எடுக்க வேண்டும். எனவே மோசமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் ரணில் விக்கிமசிங்கவிற்கு ஆதரவளித்தால் அது உங்களின் கட்சியின் புகழுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles