கொழும்பு – தூத்துக்குடி சரக்கு கப்பல் சேவை ஆரம்பம்

கொழும்பு – தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.

எம்.வி.சார்லி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து வாரம் இரு முறை, திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் தூத்துக்குடி நோக்கிக் பயணம் மேற்கொள்ளும்.

Thoothukudiஇந்தியத் துணைக்கண்டத்தில், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்டு செயற்படும் தொழில்களுக்கு இந்த சரக்கு கப்பல் சேவை வாய்ப்பளிக்கும் என துறைமுக ஆணைய உயர் அதிகாரி உப்புல் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles